இன்று ஓடிடியில் வெளியான தமிழ்ப் படங்கள்
திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மூன்று தமிழ்ப் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளன.

திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மூன்று தமிழ்ப் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளன.
ரன் பேபி ரன்
ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 3ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ரன் பேபி ரன். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
பொம்மை நாயகி
ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியான பொம்மை நாயகி திரைப்படம் பிப்ரவரி 3ஆம் திகதி திரையரங்கில் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
டாடா
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவான டாடா திரைப்படம் பிப்ரவரி 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டியுள்ள நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.