நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.

ஜனவரி 25, 2024 - 01:05
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் (Online Safety Bill), 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நேற்று (23) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்றும் இன்றும் (24) நடைபெற்றது. 

இன்றையதினம் விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார்.  

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே நிகழ்நிலை காப்புச்  சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.

எதிர்க்கட்சிகள் உட்பட சிவில் அமைப்பினர் மற்றும் பொது அமைப்புக்கள் பல நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!