இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழப்பு
கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (06) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜா-எலவில் துப்பாக்கிச் சூடு
இதேவேளை, ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பகுதியில் நேற்று (06) இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடவட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.