40 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்
சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பதுளை - மொரஹெல பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.