இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா சிக்சர்  மழை!

நவம்பர் 2, 2023 - 01:36
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா சிக்சர்  மழை!

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு புனே நகரில் நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா வழக்கம் போல 24 ரன்களில் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்ததாக வந்த ரஸ்ஸி வேன்டெர் டுஷனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டீ காக் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன்களை சேர்த்தார். 

அந்த வகையில் பவர் பிளே ஓவர்கள் கடந்தும் நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் இருவருமே 50 ரன்கள் கடந்து தொடர்ந்து வேகமாக ரன்களை சேர்த்தனர்.

ஐசிசி ஒருநாள் தவரிசையில் முதலிடத்துக்கு வந்த பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!

நேரம் செல்ல செல்ல இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 40 ஓவர்கள் வரை மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது சதமடித்த குயின்டன் டீ காக் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 114 குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய வேன்டெர் டுஷனும் சதமடித்து 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 133 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை 300 ரன்கள் தாண்ட வைத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு 2 பவுண்டரி 4 சிக்சருடன் 53 ரன்களும் கிளாசென் 15 ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா மீண்டும் 357/4 ரன்கள் எடுத்து அசத்தியது.

அதை விட இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து மொத்தம் 15 சிக்சர்கள் அடித்துள்ளனர். இதே போலவே இந்த உலகக்கோப்பையில் ஆரம்பம் முதல் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து மொத்தம் 79 சிக்சர்கள் அடித்துள்ளார்கள்.

இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. 

இதற்கு முன் கடந்து 2019 உலகக்கோப்பையில் சொந்த மண்ணில் இங்கிலாந்து 76 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!