பொது கழிப்பறை கட்டணங்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, கழிப்பறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதன்படி, கழிப்பறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய விலைக்கு மாற்றியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் முதல் தற்போதுள்ள 20 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.