சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 29, 2024 - 17:28
சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு

2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விவரங்கை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் உறுப்பினர்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!