யார் சிறந்த கேப்டன்.. ரோகித், கோலி இல்ல.. ஷாக் கொடுத்த சமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். 

பெப்ரவரி 8, 2024 - 11:31
யார் சிறந்த கேப்டன்.. ரோகித், கோலி இல்ல.. ஷாக் கொடுத்த சமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். 

டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அவர் இந்த தொடரில் இல்லாதது வருத்தமான விஷயம் தான்.

இந்நிலையில் முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமி கூறியது, இது மிகவும் கடினமான கேள்வி. சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது என்றால் மற்றவருடன் ஒப்பிடுவது போல இருக்கும். 

அது தவறாக மாறிவிடும். உலகில் வெற்றிகரனமான கேப்டன் யார் என்று கேட்டால் அது டோனி என்று சொல்லுவேன். அவரை போல யாரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்று சமி கூறினார்.

டோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!