பஸ் கட்டணம் அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பட்ட நிலையில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பட்ட நிலையில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டீசலின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் பிரகாரம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த முடியாது எனவும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாயின் ஒப்பந்தங்களின் பிரகாரமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.