முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு... வெளியான அறிவிப்பு
மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், முச்சக்கரவண்டி சாரதிகள் இணையத்தின் ஊடாக தமக்கான பயணிகளை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையின்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட "கரு சரு" திட்டத்தின் கீழ் இதற்கான வழிநடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.