உண்மையை வெளிக்கொணர முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஜனாதிபதி உறுதி
திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உண்மையை புதிய விசாரணையின் மூலம் வெளிக்கொணர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
"ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய உண்மையைக் கண்டறிய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று புதிய ஜனாதிபதி எங்களிடம் கூறினார். ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். இது கடினமான பணி. நாங்கள் அவரை முழுமையாக ஆதரிப்பதுடன், மக்கள் விரும்பும் இந்த மாற்றத்தைக் கொண்டுவர புதிய ஜனாதிபதி மற்றும் அவரது நிர்வாகத்தின் மீது எங்கள் ஆசீர்வாதங்களை வழங்குகின்றோம், ”என்று கர்தினால் கூறினார்.