ஊடகத்துக்கு புதுமை சேர்க்கும் “Media Advocacy“
Media Advocacy என்பது தற்காலத்துக்கு புதிதாக இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் ஊடகம் சார்ந்த பல பிரச்சார நடவடிக்கைகளுக்கு அது புதுமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Media Advocacy and Communication Training (New Media Act) எனும் செயலமர்வு, இலங்கை இதழியல் கல்லூரியில் இம்மாதம் 24ஆம், 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை இணைத்துக்கொண்டு இந்தச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இதழியல் கல்லூரி மற்றும் IREX ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
முதல்நாள் செயலமர்வில், செயற்பாடு, “Advocacy” எனும் சொற்பதத்தின் சரியான விளக்கத்தை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பயன்படுத்துவதன் இடர்பாடுகள் மற்றும் SMART இலக்குகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் எம்.ஜே.ஆர் டேவிட் மற்றும் New Media ஆலோசகரும் பயிற்சிவிப்பாளருமான ரொஷான் உடுகம ஆகியோர் இதன் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள் செயலமர்வின் வளவாளராக New Media பயிற்சிவிப்பாளர் ஹசித சுபசிங்க கலந்துகொண்டார். தவிர, சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர்களும் இதில் கலந்துகொண்டு, துறை சார்ந்த தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இதன்போது வானொலி Advocacyயை எவ்வாறு கையாள்வது குறித்த செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இறுதி நாள் செயலமர்வில், “Advocacy” பிரச்சார நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் எவ்வாறான பாதுகாப்புகளுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. New Media பயிற்சிவிப்பாளர் பிரசாத் பெரேரா இதற்கான விளக்கங்களை வழங்கினார்.
மேலும், canva, VPN மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்த விளக்கங்களும் இங்கு வழங்கப்பட்டன.
கொள்கை, தீர்மானம் மற்றும் மக்கள் கருத்துக்களில் தாக்கம் செலுத்துவதற்காக குழுவாக அல்லது அமைப்பாக இணைந்து செயற்படுவது Advocacy எனப்படுகின்றது.
Media Advocacy என்பது தற்காலத்துக்கு புதிதாக இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் ஊடகம் சார்ந்த பல பிரச்சார நடவடிக்கைகளுக்கு அது புதுமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.