பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம்
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23) காலை அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொது பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் இன்று காலை பொது பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.