புதிய அமைச்சரவை நாளை நியமனம்?
மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்தல் மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் என்பன தொடர்பில் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.