மஹிந்தவின் உடலநலம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்
மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று (ஏப்ரல் 7) வந்த நாமல் ராஜபக்ஷ, தனது தந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகள் கூறுவது போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.