பணமோசடி வழக்கில் இருந்து நாமல் விடுதலை
நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.

Gowers Corporate Services (Pvt) Limited தொடர்பான பணமோசடி வழக்கில் இருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.