புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது
உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று(07) கொண்டாடுகின்றனர்.

உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று(07) கொண்டாடுகின்றனர்.
உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரண்டு பண்டிகைகளில் ஒன்றே இதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது.
தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைப்பர்.
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம்கள் பிராத்தனைகளிலும், தொழுகையிலும் ஈடுப்பட்டு ஹஜ் பெருநாளை கொண்டாடிக் வருகின்றனர்.