அலைபேசி ஒளியில் பிரசவம்; தாயும் சேயும் மரணம்
இந்தியாவின் மும்பை நகரின் மருத்துவமனையொன்றில் அலைபேசி விளக்கொளியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரின் மருத்துவமனையொன்றில் அலைபேசி விளக்கொளியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
அதன் முடிவில் தாயும் சேயும் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருமணமாகி 11 மாதங்களே ஆன ஸஹிடுன் எனும் 26 வயதுப் பெண் கடந்த திங்கட்கிழமை (29 ) பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ நாளில் மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டது. 3 மணி நேரம் மின்னுற்பத்தி இயந்திரமும் இயக்கப்படவில்லை.
முதலில் சுகப் பிரசவமாகும் என்று கூறிய மருத்துவர்கள் திடீரென ஸஹிடுனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகக் கூறினர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்குத் தங்களிடம் அனுமதி பெறப்படவில்லை என்று பெண்ணின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முதலில் குழந்தையும், பிறகு தாயும் இறந்ததாகக் குடும்பத்தார் கூறியதுடன், மருத்துவமனையில் உயிர்வாயு வசதியும் இல்லை என்றனர்.
அந்தச் சம்பவத்தின் வேதனை தீர்வதற்குள் அந்த மருத்துவமனையின் அதே பிரசவ அறையில் அலைபேசி விளக்கொளியில் மற்றொரு பெண்ணுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
அதன் படங்களைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.