ஜார்க்கண்ட் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்
ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் ரயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.