பொதுவெளியில் சிகரெட் பிடித்த தோனி? வெளியான அதிர்ச்சி வீடியோ!
முன்னாள் அவுஸ்திரேலிய டி20 தலைவர் ஜோர்ஜ் பெய்லி, எம்எஸ் தோனி இளம் வீரர்களுடன் ஹூக்கா பயன்படுத்துவார் என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்எஸ் தோனி, ஹூக்கா புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தோனி எப்போதும் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணியிலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சரி வீரர்கள் பிட்டாக இருப்பது முக்கியம் என்று பலமுறை கூறி உள்ளார்.
முந்தைய ஐபிஎல் சீசனில் முழங்கால் வழியால் தோனி அவதிப்பட்டு வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மட்டுமே விளையாடி வருகிறார்.
முன்னாள் அவுஸ்திரேலிய டி20 தலைவர் ஜோர்ஜ் பெய்லி, எம்எஸ் தோனி இளம் வீரர்களுடன் ஹூக்கா பயன்படுத்துவார் என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 42 வயதிலும் கிரிக்கெட் விளையாடும் ஒரு சில கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். அவர் இன்னும் தனது உடற்தகுதியை பராமரித்து, விளையாட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.
வீரர்களுக்கு ஆதரவளிக்கும் திறன் மற்றும் இளைஞர்களுக்கு பிரகாசிக்க வாய்ப்பு அளித்தமை என்பன, ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறலாம்.
தோனி 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.
வரவிருக்கும் சீசன் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
Influential thala???? pic.twitter.com/qJlYCApxzJ — ????????????????????/???????????????????? ???????? ???????????? (@BholiSaab18) January 6, 2024