மஹிந்தவை சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கும் நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை மஹிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மஹிந்தவின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.