தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு விசாரணைக் குழுவொன்றை நியமிக்கும் யோசனை இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தவறான நடத்தை மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர், பிரேரணையை முன்மொழிந்தார்.