துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் - தாய் மற்றும் தந்தை கைது
கடந்த சனிக்கிழமை, கல்கிசை பொலிஸின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கடமை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை, கல்கிசை பொலிஸின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.