உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு
தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தாம் பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பில், முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.