நாடாளுமன்றத்திற்கு அருகில் இராணுவ வாகனம் விபத்து
சாரதி மட்டுமே பயணித்திருந்த நிலையில், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ டிஃபென்டர் வாகனம், இன்று (25) அதிகாலை 5.30க்கு விபத்துக்குள்ளானது.
பெலவத்தையில் இருந்து பொரளை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி, தியவன்னா கால்வாயில் விழுந்தது. சாரதி மட்டுமே பயணித்திருந்த நிலையில், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே குறித்த வாகனம், இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.