'மிக்ஜம்' புயல் எச்சரிக்கை நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2, 2023 - 23:41
'மிக்ஜம்' புயல் எச்சரிக்கை நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வரும் 4ம் திகதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ம் திகதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் 7 ஆம் திகதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!