8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணித ஆசிரியர் கைது!

8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் 7, 2025 - 21:47
8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணித ஆசிரியர் கைது!

10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கணித ஆசிரியர் ஒருவரை அரலகங்வில பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.

திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள கல்லூரி ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் பொலிஸில் பல தடவைகள் செய்த முறைப்பாடுகள் அடிப்படையில் கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலையின் 10 ஆம் ஆண்டு கல்வி கற்கும் 8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியரை இன்று (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரலகங்வில மகளிர் பொலிஸ் பணியகம் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!