புறக்கோட்டை தீப்பரவல் தொடர்பில் வெளியான தகவல்
இதன்போது, 23 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டமை தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீக்கிரையான வர்த்தக கட்டத் தொகுதியின் உரிமையாளர் மற்றும் அதன் அருகில் உள்ள, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
நேற்று முற்பகல் 9.35 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன்போது, 23 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.