அநுரவுக்கு மனோ கணேசன் வாழ்த்து!
ஜனநாயக செயல்பாடு மிளிர்ந்துள்ளதுடன் அநுரவின் வெற்றி, பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பம் என நம்புகிறேன்

ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தனது x தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"மக்களின் ஆணையை பெற்று கொண்டீர்கள், வாழ்த்துகள். சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் கடுமையாக பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மாகாண வாக்காளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நன்றியை தெரிவிக்கின்றது.
"ஜனநாயக செயல்பாடு மிளிர்ந்துள்ளதுடன் அநுரவின் வெற்றி, பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பம் என நம்புகிறேன்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.