மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!
திருமணம் முடிந்தவும் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றியுள்ளார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரூட் நகரைச் சேர்ந்த இளைஞன் மணமகளுக்கு பதிலாக மணமகளின் 45 வயது தாயாரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, மணமகன் முகமது அசீம் தன்னை ஏமாற்றித் திருமணம் நடத்தப்பட்டதாக பொலாரிடம் புகார் கொடுத்தார்.
அவர் 21 வயது மந்தாஷாவைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில், திருமணம் முடிந்தவும் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றியுள்ளார்.
அப்போது, மணமேடையில் அமர்ந்திருந்தது மந்தாஷா அல்ல என்றும் மந்தாஷாவின் 45 வயது தாயார் என்பது அவருக்குத் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சமரசப்பேச்சு நடைபெற்ற நிலையில், அசீம் தமது முறைப்பாட்டை பின்னர் வாபஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அசீம் திருமணத்தின்போது 500,000 ரூபாய் பணத்தை மந்தாஷாவின் குடும்பத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.