துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
ஹபராதுவ பகுதியில் இன்று(24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ பகுதியில் இன்று(24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.