இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மைத்திரிபால சிறிசேன?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சம்மதத்துடன் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.