காயமடைந்த சிறுவனை தேடிச்சென்ற மஹிந்தவின் மனைவி
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து, ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற சிரந்தி ராஜபக்ஷ, சிகிச்சைப் பெற்றுவரும் சிறுவனை நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த நிலையில், அங்கு சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.