அரசியலில் இருந்து மஹிந்த ஓய்வு; தேர்தலில் போட்டியிட மாட்டார்?
அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை மற்றும் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது அரசியலில் ஈடுபடுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு ஆழமாக விவாதிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.