மஹேல இலங்கை ஆலோசகர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்

மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

ஜுன் 27, 2024 - 00:36
ஜுன் 27, 2024 - 00:39
மஹேல இலங்கை ஆலோசகர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்

இலங்கை கிரிக்கெட் அணியின்  ‘ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக’ பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தன , அவரது பதவிக் காலத்தில், தேசிய அணி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயல்படுத்த உதவினார் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட் மஹேலவின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும், அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின்  ‘ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக’ ஜெயவர்தன நியமிக்கப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!