லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது காலி!
எல்பிஎல் தொடரில் நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் தம்புள்ளை ஆரா அணியை சூப்பர் ஓவர் முறையில் காலி டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

லங்கா பிரீமியர் லீக்
எல்பிஎல் தொடரில் நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் தம்புள்ளை ஆரா அணியை சூப்பர் ஓவர் முறையில் காலி டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
லங்கா பிரீமியர் லீக் தொடரிம் 4ஆவது சீசன் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் காலி டைட்டன்ஸ் - தம்புள்ளை அரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புள்ளை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய காலி அணியில் தொடக்க வீரர் லசித் குரூஸ்புலே 4 ரன்கலுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் - பனுகா ராஜபக்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டேனியல் 33 ரகளுக்கு ஆட்டமிழக்க, ராஜபக்ஷாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
அதனைத்தொடர்ந்து வந்த டிம் செய்ஃபெர்ட் 14, ஷாகிப் அல் ஹசன் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதியில் கேப்டன் தசுன் ஷனகா 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் காலி டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புள்ளை அணியில் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் இணைந்த தனஞ்செய டி சில்வா - குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனஞ்செய 43 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த சதீரா சமரவிக்ரமனா, ரவிந்து ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய அலெக்ஸ் ரோஸ் 39 ரன்களைச் சேர்த்து உதவினார்.
இதனால் தம்புள்ளை ஆரா அணியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை சமன்செய்தது. காலி அணி தரப்பில் தசுன் ஷனகா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இப்போட்டியின் முடிவை எட்ட சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்க பட்டத்து.
அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தம்புள்ளை அணி ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திய காலிஅணியில் பனுகா ராஜபக்ஷா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் காலி டைட்டன்ஸ் அணி சூப்பர் ஓவரில் தம்புள்ளை ஆரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.