மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
சந்தானம் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார்.

லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு 60, மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானார். நடிகர் சந்தானம் தனது பல படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காமடி நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். விவேக், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் உயிரிழந்த நிலையில், காமெடி நடிகர் சேசுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
சந்தானம் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார்.
அந்த காட்சியில் நடித்து கலக்கியிருப்பார் சேசு. இவருக்கும் நிழல்கள் ரவிக்கும் இடையே நடக்கும் அந்த காட்சியெல்லாம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் சலங்கை கட்டிக் கொண்டு இவர் ஆடும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தன.
சற்று முன் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேசு உயிரிழந்து விட்டார் என்கிற செய்தியை அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.