உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன்  தொடர்புடைய  06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 24, 2025 - 15:34
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன்  தொடர்புடைய  06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறியது தொடர்பில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,  அதில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாத்தளையில் மூன்று முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ,மொனராகலை மற்றும் பொலன்னறுவையில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!