உள்ளுராட்சி தேர்தல் - மலையக கட்சிகளின் தீர்மானம்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடன்பாடு எட்டப்படாத மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடன்பாடு எட்டப்படாத மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிர்வரும் 3 நாட்களுக்குள் இறுதித் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பான இறுதி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று அறிவிக்கவுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சியின் உயர்மட்டகுழு கூடி, குறித்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.