ஆஸ்திரேலிய வீரர் சவால்: இந்தியாவின் ஹாட்ரிக் கனவை உடைப்போம்
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) பங்கேற்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) பங்கேற்க உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் தோல்விகளையே சந்தித்துவந்த நிலையில், 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் அங்கு வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, அங்குள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்துக்கு சென்றுள்ளது.
மறுபுறம், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை பைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றிருந்தனர். அதே நேரத்தில், கடந்த 2 பார்டர்-கவாஸ்கர் தொடர்களில், சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த அனுபவம் ஆஸ்திரேலிய அணியினருக்கு இருந்தது. இந்த முறை, அந்த தோல்விகளுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அணியின் மேம்பாட்டைக் குறிப்பிட்டு, ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வீழ்த்துவது கடினமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவின் ஹாட்ரிக் கனவை உடைக்க ஆஸ்திரேலிய அணி தயாராகி வருவதாகவும், இதற்காக அவர்கள் முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
"இந்த 2 அணிகள் ஒன்றாக விளையாடும்போது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு மிகவும் நன்றாக இருப்பதால், அவர்கள் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் மேலோங்க முடிகிறது. எனினும், இந்த கோடையில் நாங்கள் அவர்களை உண்மையான அழுத்தத்தின் கீழ் தள்ளி வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
இந்த வார்த்தைகள் இந்தியா-ஆஸ்திரேலியா மோதலின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.