முறையற்ற விதத்தில் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சில வர்த்தகர்கள் வற் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வற் வரி அதிகரிப்பு என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள் வற் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அடுத்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், அது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், குறித்த வரி அமுலாவதற்கு முன்னதாகவே நியாயமற்ற வகையில் பொருட்களின் விலையை அதிகரித்துள்ள வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனேவே, இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க 1977 என்ற துரித தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.