மாரடைப்பால் களத்திலேயே சுருண்டு விழுந்த பிரபல வீரரின் மகன் .. 18 வயதில் சோகம்!
புரோனி ஜேம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த செய்தி அறிந்ததும் லப்ரான்ஸ் ஜேம்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

என்பிஏ எனப்படும் அமெரிக்க தேசிய கூடை பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபலமானவர் லெப்ரான் ஜேம்ஸ். இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் லெபரான் ஜேம்ஸ் இன் மகன் புரோணி ஜேம்ஸ் 18 வயதாகிறது. இவர் தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார்.
கல்லூரியில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில் புரோனி ஜேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது களத்திலே புரோனி ஜேம்ஸ் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து புரோனி ஜேம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த செய்தி அறிந்ததும் லப்ரான்ஸ் ஜேம்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காத்திருந்து காத்திருந்து.. ஆஷஸை பறிகொடுத்த இங்கிலாந்து.. கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியா!
இந்த நிலையில் லெப்ரான் ஜேம்ஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் தோனி ஜேம்ஸ்க்கு கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
புரோனி ஜேம்ஸ் இன் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தீவிர கண்காணிப்பு பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த கடினமான சூழ்நிலையில் அவரை ரசிகர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் புரோனி ஜேம்ஸ் தொடர்பான அடுத்தடுத்த அறிவிக்கைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தனது மகனை உரிய நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் லெப்ரான் ஜென்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னுடைய மகனுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் கூறியுள்ளார்.
கல்லூரியில் விளையாடும் போது தனது தந்தை போல் பிரமாதமாக செயல்பட்ட புரோனி ஜேம்ஸ்க்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.