வரி தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு 

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை அறிவிப்பதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜுலை 14, 2023 - 10:35
வரி தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு 

கிடைக்கப்பெறும் முதல் சந்தர்ப்பத்தில் வரிச்சுமையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை அறிவிப்பதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,

"ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களை பார்த்தால், 2022 ஆம் ஆண்டை விட 38.1 சதவீதம் வளர்ச்சி உள்ளது. வரி வருவாய் 44.9 சதவீதம் அதிகரித்துள்ளது. வருமான வரி 53.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 65.6 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான வரி 12.2 சதவீதம் குறைந்துள்ளது. இது சுங்கத்தின் தவறல்ல, ஆயிரக்கணக்கான பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி இந்த நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வந்தோம். 

எங்களின் மொத்த செலவுகள் 47.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாட்டின் வழக்கமான வரி செலுத்துவோர் மீது ஒரு புதிய சுமையை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 

முதல் வாய்ப்பிலேயே அவர்களின் வரிச்சுமையைக் குறைக்கும் அளவுக்கு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று நம்புகிறோம்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!