6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

ஜுன் 1, 2023 - 15:53
6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டு 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 14 ரூபாயால் குறைக்கப்பட்டு 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 11 ரூபாயால் குறைக்கப்பட்டு 314 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 229 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கடலை ஒரு கிலோகிராம் 05 ரூபாயால் குறைக்கப்பட்டு 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளை நாடு ஒரு கிலோகிராம் 04 ரூபாயால் குறைக்கப்பட்டு 175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!