தசுன் ஷனகா கலக்கல் - தம்புள்ள அணியை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

ஜுலை 2, 2024 - 10:30
ஜுலை 2, 2024 - 11:52
தசுன் ஷனகா கலக்கல் -  தம்புள்ள அணியை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்தாடிய கண்டி பல்கோன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அபாரமாக பந்துவீசிய கண்டி அணி, தம்புள்ள அணியின் முதல் 4 விக்கெட்டுகளை பவர் பிளேவுக்கு முன்னர் கைப்பற்றியது. இதில் தசுன் ஷானக 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் சரிக்கப்பட்ட போதும், அடுத்து ஜோடி சேர்ந்த மார்க் செப்மன் மற்றும் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் அபாரமான இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்தனர். 

ஒருகட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி இழந்திருந்த போதும், இவர்களின் இணைப்பாட்டம் மூலம் எவ்வித விக்கெட்டிழப்புமின்றி 179 ஓட்டங்களை குவித்தது.

அதிரடியாக ஓட்டங்களை குவித்த மார்க் செப்மன் 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், சமிந்து விக்ரமசிங்க 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

பந்துவீச்சில் தசுன் ஷானக 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பல்கோன்ஸ் அணிக்காக தினேஷ் சந்திமால் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். 

இவர் வெறும் 29 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன், 40 பந்துகளில் 3 சிக்ஸர்க்ள மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். இவருடன் 27 ஓட்டங்களை பெற்ற கமிந்து மெண்டிஸும் ஆட்டமிழந்தார்.

எனினும் இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக ஆகிய அனுபவ வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவித்து கண்டி பல்கோன்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கினர். 

இதில் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் இவர்கள் 72 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். தசுன் ஷானக 15 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை குவித்ததுடன், அஞ்செலோ மெதிவ்ஸ் 20 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார். 

கண்டி பல்கோன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!