கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்தில் காயம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அநுராதபுரம் - திரப்பனே வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.