பொலிஸாருக்கு பற்றாக்குறை; அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுக்கின்றது.
உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தீர்வாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.