மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. அஞ்சத்தில் மக்கள்..

கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

டிசம்பர் 14, 2023 - 22:23
மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. அஞ்சத்தில் மக்கள்..

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் ஆகும்.

கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரமும் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.

"தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், பாதிப்பின் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலைமை கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது," என மருத்துவர் முகமது நியாஸ் தெரிவித்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!