கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் இன்று முன்னிலை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

பெப்ரவரி 2, 2024 - 12:09
கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் இன்று முன்னிலை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

நாட்டுக்கு 22,500 தரமற்ற தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்காத நிலையில், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அத்துடன். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் திணைக்களத்தில் முன்னிலையாவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!