7 மாத காயத்தில் இருந்து மீண்டு வந்த வில்லியம்சன் செய்த தரமான சம்பவம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7 மாதத்திற்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஒக்டோபர் 14, 2023 - 11:28
7 மாத காயத்தில் இருந்து மீண்டு வந்த வில்லியம்சன் செய்த தரமான சம்பவம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7 மாதத்திற்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் 11வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடியது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். ஐபிஎல் தொடரின் போது சென்னை அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது வில்லியம்சன் காயமடைந்தார்.

அதன்பின் ஊன்றுகோல் உதவியுடன் கேன் வில்லியம்சன் நடந்து சென்ற காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

பாகிஸ்தான் அதிக முறை வெற்றி.. இந்தியாவின் தோல்விகளுக்கு யார் காரணம் தெரியுமா?

காயத்தில் இருந்து வில்லியம்சன் வேகமாக மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்தினர். ஆனால் கேன் வில்லியம்சனின் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நீண்ட மாதங்களாக ஓய்வில் இருந்தார்.

உலகக்கோப்பை தொடரிலேயே விளையாடுவது சந்தேகம் என்று பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், முழு ஃபிட்னஸை எட்டும் வரை உலகக்கோப்பை தொடரின் சில போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனால் வில்லியசம்சனின் வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கூடுதலாக எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 

இவரால் ஓட முடியுமா, சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியுமா என்று வர்ணனையில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பிய போதே, பவுண்டரி எல்லை வரை ஓடி சென்று ரன்களை கட்டுப்படுத்தினார்.

இதன்பின் முதல் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்க்கப்பட்டது. 

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 12 ரன்களிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்பின் நிதானமாக பேட்டிங் ஆடிய வில்லியம்சன், 81 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

இதன்பின் அதிரடியாக சில பவுண்டரிகளை அடிக்க, நியூசிலாந்து அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 

7 மாத இடைவெளிக்கு பின் களமிறங்கிய வில்லியம்சன் தனது கிளாசிக் ஆட்டத்தை முதல் போட்டியிலேயே வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!